Thu. May 2nd, 2024

பல கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இந்த வாரம் ஒரு முடிவு

பல கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இந்த வாரம் ஒரு முடிவு எட்டப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்த முடிவை இந்த வாரம் எடுக்க முடியும் என்பது அவரது கருத்தாகும்.

இதுதொடர்பில் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

உள்ளூராட்சி சபைகளின் ஆதரவுடன் அனைத்துப் பாடசாலைகளின் வளாகங்களும் கிருமி நீக்கம் செய்யப்பட உள்ளன.

அதன்படி, முதல் கட்டமாக உயர்தர மாணவர்களுக்கும் இரண்டாம் கட்டமாக சாதாரணதரத்தில் பயிலும் மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவை எட்டுவதற்கான அதிகாரங்கள் தேசிய மட்டங்களில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் மாகாண குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாகாண குழுக்களில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

மீள ஆரம்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை, திகதி, பாடசாலை நேரம் உள்பட வாரந்தோறும் பாடசாலைகள் இயங்கும் நாள்கள் குறித்து இந்தக் குழுக்கள் முடிவு செய்யும் – என்றார்.

இதேவேளை, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த இடைக்கால கையேடு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்கவால் தொகுக்கப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடசாலைகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டங்களின் கீழ் பரிச்சாத்தமாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும், அதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் ஏனைய பாடசாலைகளை படிப்படியாக மீள ஆரம்பிக்கப்படவேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

இதுதொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சின் செயலாளரால் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு, தேசியப் பாடசாலை அதிபர்களுக்கும் நாளை அனுப்பிவைக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்