Sat. May 4th, 2024

பருத்தித்துறை நகர சபை பாதீடு பல்டி அடிக்கும் உறுப்பினர்கள்

பருத்தித்துறை நகர சபை பாதீடு விலைபோகும் அரசியல்வாதிகளால் மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

பருத்தித்துறை நகர சபையின் பாதீடு கூட்டமைப்பு உறுப்பினரை தலைவராக கொண்ட தவிசாளரினால் கடந்த கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த 5 வருட ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கான செயற்றிட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படமையை கண்டறிந்து குறித்த கூட்டமைப்பு உறுப்பினர் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்து பாதீடு தோல்வியடைந்தது. இரண்டாவது பாதீடு  சமர்ப்பிக்கபடவுள்ள நிலையில் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்த உறுப்பினரிடம், பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களியுங்கள்,  பாதீடு வெற்றியடைந்ததும்,  குறித்த தவிசாளர் தனது பதவியை இராஜினா செய்ய,  தங்களை தவிசாளராக்குவதாக கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களால் இரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. மக்களுக்கான செயற்றிட்டம் எதுவும் செய்யப்படவில்லை என எதிராக வாக்களித்தவர்கள், தமக்கு பதவிகள் தருவதாக இருப்பதனால் ஆதரவாக வாக்களிப்பது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் நாளைய பாதீட்டிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் அனைவரும் எதிராக வாக்களித்தால் பாதீடு தோல்வியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்