Thu. May 9th, 2024

பத்து வயதுச் சிறுவனின் உயிரைப் பறித்த ஊஞ்சல் கயிறு. !

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இஞ்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில்  செம்மலை பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பிரசாத் தனேஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் நேற்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்