Thu. May 9th, 2024

நெல்லியடியில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமானவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் சிவப்பு அறிவித்தலையும் கருத்தில் கொள்ளாது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு காரணமாக உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட அதிகாரிகளால் வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த பகுதிகளில் டெங்கு நுளம்பு, அல்லது டெங்கு குடம்பிகள் காணப்பட்டால் சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு அவர்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடாததையிட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்படி கடந்த 18ம் திகதி நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் கல்யாண மண்டபம் மற்றும் வர்த்தக நிலையம் போன்றவற்றின் பின்புறங்கள் அதிகளவான நுளம்பு பெருக்கம் காணப்பட்டதற்கு இருவழக்கும்,  கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் ஒருவழக்கும்,  துன்னாலை பொதுச் சுகாதார பிரிவில் 2 வழக்கும்,  அல்வாய் பொதுச் சுகாதார பிரிவில் ஒரு வழக்குமாக 6 வழக்குகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு கரணவாய் பொதுச் பிரவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வழக்கிற்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஏனைய வழக்குகள் எதிர்வரும் மூன்றாம் மாதம் முதலாம் திகதிக்கும் திகதியிடப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 4ம் திகதி நெல்லியடி சுகாதார பிரிவில் வீடொன்றில் நீர் தொட்டியிலும், கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் வீடொன்றில் பல கொள்கலன்களிலும், பொது வாய்க்காலுக்கு வீட்டில் இருந்த நீரை வெளியேற்றி நீர் தேங்க வைத்தமை தொடர்பிலும் வழக்கு தாக்கல் செய்யபட்டு, கடந்த 8ம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் தொடரப்பட்ட ஒரு வழக்கிற்கு 25 ஆயிரம் ரூபா அபராதமும்,  ஏனைய இரு வழக்குகளும் எதிர்வரும் 9 திகதிக்கு திகதியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்