Sat. Apr 27th, 2024

நெல்லியடி பஸ் நிலையத்தின் துர்ப்பாக்கிய நிலை, கண்டுகொள்ளாத பிரதேச சபை

நெல்லியடி வர்த்தக சங்கத்தினால் நெல்லியடி நகரப்பகுதியில் பஸ் நிலையத்தில் தொற்று நீக்குதல் பாவனைக்காக கை கழுவும் தொற்று நீக்கல் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு தண்ணீர் வசதி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் பாவனைக்கு கொடுக்கப்பட்டு வந்திருந்தது . தற்சமயம் தண்ணீர் இல்லாமல் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. மலசலகூடம் இழுத்து மூடப்பட்ட நிலை காணப்படுகின்றது. பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இலத்திரனியல் மணிக்கூட்டையும் காணவில்லை. பாவனையிலிருந்து பழுதடைந்தது என தெரிவிக்கப்பட்ட சிசிடிவி கமராவையும்  காணவில்லை. இதனை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தான் எடுத்து சென்றதாக பொதுமக்களால் கூறப்படுகின்றது. இதனால் நெல்லியடி நகர பகுதியில் அடிக்கடி துவிச்சக்கர வண்டிகள் களவு போய் வருகின்றது. பொறுப்புள்ள அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த பொருட்களை திருத்தி பஸ்நிலையத்தில் பொருத்துமாறு பொதுமக்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்