Fri. May 10th, 2024

போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கான எச்சரிக்கை

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி செயற்படுபவர்கள் மற்றும் உண்மை தகவல்களை மறைத்து போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (06) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலமையின் அடிப்படையில் போலியான தகவல்களை வழங்குவது குற்றம் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றத்திற்கு தண்டனையாக குற்றவாளியை 5 வருடம் விளக்கமறியலில் வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்