Sat. May 4th, 2024

நெல்லியடி, அல்வாய் பகுதி தொற்றாளர்களுடன் 72 பேருக்கு தொற்று

உடுவில் பகுதியில் அதிக தொற்றாளருடன் யாழ் மாவட்டத்தில் 45 பே உட்பட வடமாகாணத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வெளியான முடிவுகளின் அடிப்படையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறச் சென் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த இருவருக்கும்,  நெல்லியடி வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இருவருக்கும்,  துன்னாலை கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கொற்றாவத்தை வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை விட
உடுவில் சுகாதார பிரிவில் 15 பேருக்கும்,  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 18 பேருக்கும்,  பருத்தித்துறை சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  வேலணை சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  பண்டத்தரிப்பு வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  தெல்லிப்பளை வைத்தியசாலையில் 2 பேருக்கும் என யாழ் மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை சுகாதார பிரிவில் 3 பேருக்கும்,  பூநகரி சுகாதார பிரிவில் 3 பேருக்கும்,  மடு சுகாதார பிரிவில் 6 பேருக்கும்,  காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவருக்கும்,  முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும்,  மன்னார் ஆதார வைத்தியசாலையில் 2 பேருக்கும்,  செட்டிகுளம் வைத்தியசாலையில் 4 பேருக்கும்,  முல்லைத்தீவு சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  செட்டிகுளம் சுகாதார பிரிவில் 4 பேருக்கும் என வடமாகாணத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்