Fri. May 3rd, 2024

நிலவிந்தனின் “மிதிபடும் காவோலைகள்” 2ம் இடம்

வவுனியா கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த நிலவிந்தன் அவர்களால் எழுதப்பட்ட “மிதிபடும் காவோலைகள்” இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.
பாலுமகேந்திரா நூலகத்தின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சிறுகதை போட்டியொன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 328 பேரால் எழுதப்பட்ட 443 சிறுகதைகள் கிடைக்கப்பட்ட நிலையில் உலகம் முழுதிலும் இருந்த பலர் கலந்து கொண்டனர். நேற்று மாலை இரண்டாம் ஆண்டு ஆரம்ப நிகழ்வு நிகழ்நிலையினூடாக நடைபெற்றது.
அப்போது அறிவிக்கப்பட்ட போட்டி முடிவில் வடமாகாணத்தில் இருந்து வவுனியா கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த நிலவிந்தன்  எழுதிய “மிதிபடும் காவோலைகள்” சிறுகதை இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
இவற்றுள்  ஈழத்து சிறந்த  எழுத்தாளர்களும் சிலர் பங்கு பற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நிலவிந்தன் கருத்து தெரிவிக்கையில்,
இந்தப் புரிதல் புது  உத்வேகத்தையும் நம்பிக்கையையும் எனக்கு தருகிறது.
அத்தோடு  நம்மண்ணின் முக்கிய அடையாளமாக வளர்ந்து வருகின்ற பாலுமகேந்திரா நூலகத்தின் சமூக அக்கறையும், தூரநோக்கும், பயணமும் மகிழ் வெற்றியடைய வாழ்த்துக்களும் நேசங்களும்.
நான் எழுதிய மிதிபடும் காவோலைகள் என்பது யுத்தத்தின் நீட்சியால் அவதிப்பட்ட ஒருதாயின்   அழுகையா?   காத்துக்கொள்ள வேண்டிய யாரோ ஒருவரால்   புணரப்பட்ட பாடசலை சீருடையணிந்த மூத்த மகளா?  இவர்கள் காவோலைகள் அப்படியானால் மிதிப்பது யார்? ஓம் இது தான் நான் எழுதிய கதை.
 நான் எழுதிய போதெல்லாம்  வாசிக்கவும்,கருத்துகள் கூறி என்னை எழுத உத்வேகப்படுத்தவும்   நண்பர்களும், அன்பர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்குத்தான் இந்த மகிழ்வும்    இன்றைய நம்பிக்கையும் சொந்தம் அவர்களுக்கும் அன்பும் நன்றியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்