Sat. Apr 20th, 2024

நீங்கள் என்ன அறிவிப்பது, நாங்களே திறந்து விட்டோம்

நீங்கள் என்ன பயணத் தடையை நீக்குவது, நாங்களே நீக்கி நாங்களே வீதிக்கு வந்துவிட்டோம் என வர்த்தகர்கள் தமது வியாபாரத்தை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார்கள். 15வரை,1ம் திகதி வரை, இது நீடிப்பதா? இல்லையா? என்ற முடிவு இன்று வெளியாகும் எனக் குறிப்பிடுவதெல்லாம் இனி எம்மில் பலிக்காது என வர்த்தகர்கள் தமது வியாபாரத்தை தொடங்கி விட்டார்கள்.

வடமராட்சி பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில் வர்த்தக நிலையங்கள் பலவும் இரு கதவுகளையும் திறந்து தமது வியாபார நடவடிக்கையை ஆரம்பித்து விட்டதுடன், வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்கூடிய விதத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்களும் தமது கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு என்ன காரணம்
இவ்வளவு காலமும் பொறுமையாக இருந்த வர்த்தகர்கள் அண்மையில் அரசு மதுபானக் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அறிவித்த போதிலும்,  நாட்டில் மதுபானக் கடைகள் திறந்து வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மதுப் பிரியர்களின் நாக்கிற்கு சுவையளிக்கும் சிற்றுண்டிச் சாலைகளும் திறந்து வியாபார நடவடிக்கை நடைபெறுகிறது. இதற்கு பொலீஸாரே காவலிலும் ஈடுபடுகிறார்கள்.
இதற்கு மக்கள் நடமாட்டத்தை குறைக்க பிரதான சந்திகளில் பொலீஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் வேறு,
அரசுக்கு எதிராக மக்கள் கூறும் அடுத்த குற்றச்சாட்டு,
சமூக இடைவெளிகள் இன்றி நடாத்தப்பட்ட அன்னதான மடங்கள், இறந்தவருக்கான இறுதி அஞ்சலி, திருமண தம்பதிகளுக்கான வாழ்த்துக்கள் போன்றவற்றை எல்லாம் தடை போட்ட சுகாதார துறை மதுபானக் கடைகளில் ஏராளமானோர் ஒன்று கூடியதையும், சமூக இடைவெளிகள் பேணாமல் செயல்பட்டதையும் ஏன் தடை செய்யவில்லை.
பயணத் தடை காரணமாக பிரதான நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
வேலையாட்களுக்கு சம்பளம், கடன்களுக்கான காசோலைகள், பொருட்களின் விலை உயர்வு, வாடிக்கையாளர்கள் இழப்பு என பல இன்னல்களை சந்தித்துள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரிக்கும் போது பயணத் தடை விதிக்கப்பட்டால் அனைத்து வர்த்தக நிலையங்களையும் சமூக இடைவெளிகளைப் பேணி திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்