Mon. Apr 29th, 2024

நாளையும், நாளை மறுதினமும் கனமழை -நாகமுத்து பிரதீபராஜா தெரிவிப்பு

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
மத்திய வங்காள விரிகுடாவில் அந்தமான் – நிக்கோபார் தீவுகளுக்கருகே தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது நாளை  வியாழக்கிழமை வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை இரவு அல்லது  நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை ஒடிசாவிற்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் பிரதேசத்தில் மணிக்கு 60 கிலோ மீற்ரர் தொடக்கம் 70 கிலோ மீற்ரர் வேகத்திலும், கரையோரப்
பிரதேசத்தில் மணிக்கு 50 கிலோ மீற்ரர் தொடக்கம் 60 கிலோ மீற்ரர் வேகத்திலும், காற்று வீசும். வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. பல பிரதேசங்களில் மழை கிடைக்கக் கூடிய அதேவேளை சில பிரதேசங்களில் மிக்க கூடிய கனமழை கிடைக்கும். அதேவேளை நாளை மறுதினம் 17ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பதுடன், நாளை வியாழக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் மிகக் கூடுதலான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்