Thu. May 9th, 2024

நவாலி மக்கள் வீதியை மறித்து நாளை போராட்டம்

நவாலி தெற்கு இராஜ   – ராஜேஸ்வாி  வீதியினை  முழுமையான காப்பெற் வீதியாக  சீர் செய்து தருமாறு கோரி  நாளை ஞாயிற்றுக்கிழமை  பொதுமக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
 
நவாலி மக்கள் ஒன்றிணைந்து யாழ் வீதி அபிவிருத்தி அதிகார  சபையின் திட்டப்பிரிவிற்கு  (Project Division)  எதிராக மக்கள் ஆா்ப்பாட்டத்தில்  முழுமையாக  ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ள மக்கள் தெரிவிக்கையில்
 
2016 இல் முன்மொழியப்பட்ட     இரு வீதிகள்  காப்பெற்  (i – Project) திட்டத்தில் நவாலி தெற்கு இராஜராஜேஸ்வாி வீதி மற்றும்  நவாலி  வடக்கு தழுவில் வீதி என்பன உள்வாங்கப்பட்டது.
இதில் நவாலி  தெற்கு  இராஜ   – ராஜேஸ்வரி வீதி  அரைகுறையான முழுமை  பெறாத  வேலைத்திட்டத்தினை  உலகவங்கியின் நிதியுதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப்பிாிவு முன்னெடுத்து  வருகின்றது.
எனவே மீதமான 200 மீற்றா் நீளமான வீதிப் புனரமைப்பு (காப்பெற் )  பணியை முன்னெடுத்தால் மட்டுமே  இவ்வீதியினை  தொடா்ந்து மீள்புனரமப்பு  அனுமதிப்போம்.  இல்லாவிடில்  அரைகுறை வீதி  புனரமைப்பு  பணி தொடா்பாக  விரைவில்  யாழ். மாவட்ட அரசாங்க அதிபா் ஊடாகவும். நேரடியாகவும் உலகவங்கியின் தலைமை காாியாலயத்திற்கு  அறிவிப்போம் என
தொிவிக்கப்பட்டுள்ளனர்.
இதே நேரம் அரைகுறையில்  மீதமான  200 மீற்றா் நீளமான வீதி  இவ் காப்பெற் திட்டத்தில் நிச்சயம்  உள்வாங்கப்பட வேண்டிய  விடயம் என நோில் நேற்றுப்பாா்வையிட்ட போது மானிப்பாய் பிரதேச சபை தவிசாளா் அ. ஜெபனேசன்  மக்களுக்கு  தொிவித்ததுடன் சமபந்தப்பட்ட  அதிகாாிகளின் உடனடி கவனத்திற்கும் கொண்டு வந்தாா்.
 
இதே நேரம் 2016 இல் இத்திட்டம் முதல்முதல் முன்மொழிந்த போது  CPM  வீதியில் இருந்து  கொத்துக்கட்டி பிரதான வீதி வரையான ”  L ”  எல் வடிவிலான வீதி ஜிபிஎஸ்  மூலம் அளந்த போது   உள்வாங்கப்பட்டு பின்னா் எவ்வாறு கைவிடப்பட்டது  ஏன் என முழு மொத்த மக்களும்  கேள்வி எழுப்பியுள்ளனர்
 
 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்