Wed. May 1st, 2024

நள்ளிரவு எரிபொருட்களின் விலை குறைப்பு

நேற்று நள்ளிரவு (31.03.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும். 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும், டீசல் மற்றும் ஒக்டேன் 92 பெட்ரோல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்