Sat. Apr 27th, 2024

தேசிய மாணவர் பாராளுமன்றத்தில்வடமாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர்

மாணவ பாராளுமன்றத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.
தேசிய மாணவர் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய  வவுனியா வடக்கு வலய  வ/ கல்மடு மகா வித்தியாலய மாணவன் நாகராசா திலக்சன், பிரதி சபாநாயகராகவும்,  பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக  வடமராட்சி வலயம் யா/ ஹாட்லி கல்லூரி மாணவன்  மோகன் அர்ஜுன் அவர்களும்  தெரிவாகியுள்ளனர்.
இலங்கை பாடசாலை மாணவர் சமூகத்தினருக்கு ஜனநாயகம் ஜனநாயக விழுமியங்கள் அதன் கட்டமைப்பு தொடர்பான செயன்முறை அனுபவங்களை அடைவதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சினால் ஒழுங்கமைக்கப்படும் தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வினை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்