Sat. May 4th, 2024

தேசிய மட்ட பளுதூக்கலில் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம் தங்கம், வெள்ளி,  வெண்கலப் பதக்கங்கள் 

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கலில் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலய மாணவிகள்  தங்கம்,  வெள்ளி,  வெண்கலப் பதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களை கைப்பற்றினர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கும் போட்டி கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வியாழக்கிழமை வரை பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் பெண்களிற்கான பளுதூக்கும் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் 40 கிலோ எடைப் பிரிவில் எம்.மகிழினி 83 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் 76 கிலோ எடைப் பிரிவில் எம். டினுஷா 79 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப்  பதக்கத்தையும்,  20 வயதிற்குட்பட்ட 81 கிலோ நிறைப் பிரிவில் ஜெ.டிலுஷா 105 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்