Sun. Apr 28th, 2024

தேசிய மட்ட குண்டு போடுதல் புதிய சாதனையைப் பதிவு செய்த மிதுன்ராஜ் 

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட குண்டு போடுதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ். மிதுன்ராஜ் புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான குண்டு போடுதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ். மிதுன்ராஜ் 15.95 மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார். 2018ம் ஆண்டு பண்டாரவினால் எறியப்பட்ட 15.67 மீற்ரர் தூரத்தையே இவர் 15.95மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்