Sat. Apr 27th, 2024

தீர்வு கிடைக்கும் வரை கூட்டங்களிலும் பங்கேற்க மறுப்பு

பாடசாலை ஆரம்பிப்பதற்கான கூட்டங்கள் மற்றும் இதர கடமைகளில் இருந்து விலகுவதாக தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிக்கும் பொருட்டு மாகாண ஆளுனர்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிபர்களுக்கான கூட்டங்கள் 8 ஆம் திகதி முதல் வலய மட்டங்களில் இடம்பெறும் என விடுக்கப்பட்ட அழைப்பிற்கு ஆசிரியர் அதிபர் தொழில்சங்கங்கள் தமது பதிலை எழுத்து மூலம் அறிவித்துள்ளன.

சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் தொழில்சங்கப் போராட்ங்களில் ஈடுபட்டுள்ளமையினால் மேற்குறிப்பிட்ட கூட்டங்களில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதோடு, ஏனைய அனைத்து உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்தும் தாம் தொடர்ந்தும் விலகியிருப்பதாக தொழில்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு கிடைக்கும் வரை இந்த தொழில்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அக்கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் உட்பட பல தொழில்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் ஒப்பமிட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்