Tue. May 7th, 2024

தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாகவும், வீரத்தலைவனாகவும் செயல்பட்டவர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை.

கிறிஸ்தவ மக்களுக்கு மாத்திரம் அல்ல தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாகவும், ஒரு வீரத்தலைவனாகவும் நான் அவரை பார்க்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்குச் சென்ற என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் அதி மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
ஆதனைத ;தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் அதி மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவரை சந்தித்து ஆசி பெற்று மன்னார் மறைமாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அடையாளத்தை காண்பித்துள்ளார்.
கிறஸ்தவ மக்களுக்கு மாத்திரம் அல்ல தமிழ் பேசுகின்ற மக்களுக்கு ஓர்அடையாளமாகவும், ஒரு வீரத்தலைவனாகவும் நான் அவரை பார்க்கின்றேன்.
இலங்கையில் இடம் பெற்ற அனைத்து பிரச்சினைகளையும் ஒரு வீரத்தலைவனாக இருந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.
அவரின் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிக்கின்றேன்.
வட மாகாணம் பல விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.எத்தனை பிரச்சினை வந்தாலும் யாராக இருந்தாலும் ஆயர் இல்லத்திற்கு வந்து விடை பெற்றுச் செல்லுகின்றனர்.
ஆயர் இல்லம் நீதி வழங்கக்கூடிய சரியான ஓர் இடமாக நான் கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.இதன் போது ஐ.டி.எம். நேசன் கெம்பஸ் தலைவர் வி.ஜனகன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்