Sat. May 4th, 2024

தமிழக தலைவர்கள் மீது நாமல் விமர்சனம்

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் விமர்சித்துள்ளார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான
கோத்தபயா ராஜபக்சே இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர் கருத்தை பதிவிட்டனர்.

கோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. என வைகோ பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார். கோத்தபாயவின் வெற்றியால் உலகத் தமிழர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்றனர் என்றும் ஈழத்தமிழர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கையை தொடங்குமாரு பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். திருமாவளவன் எம்.பி இலங்கை தேர்தல் முடிவு மிகுந்த கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டார். இன்னும் பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பத்திரிகையாளரிடமும், சமூக வலை தளங்களிலும் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே மகனும் எம்.பி.,யுமான நாமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசியல் தலைவர்களை கடுமையாக சாடினார். அந்த அறிக்கையில் தமிழக அரசியல் தலைவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். அதில் சிலர் சுயநலத்துடன் சந்தர்ப்பவாத அறிக்கைகளை விடுகின்றனர். அவர்கள், எம் மக்களுக்காக அரசியலை தவிர வேறென்ன ஆக்கபூர்வமான விஷயத்தை செய்திருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2009ல் யுத்தம் முடிந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முன்னால் முதல்வர் கருணாநிதியின் காட்ச்சியானா திமுக வின் பாராளுமன்ற குழுவினர் இலங்கை வந்து யுத்தம் நடந்த வடக்கு கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவுடன் சிநேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டனர். அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது.

எமது ஜனாதிபதியும் எமது எதிர்கால அரசியலும் எல்லா சந்தர்ப்பத்திலும் வெளிப்படையாகவும், நல்லெண்ணத்துடனும் செயட்படும் என்றும் நாமல் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்