Sat. Apr 27th, 2024

டெங்கு பரவலை தடுக்க அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம்

டெங்கு தொற்றைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் மக்கள் தொடர்பு கொள்வதற்காக சுகாதார அமைச்சு அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னெச்சரிக்கை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள 011-7966 366 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இன்று (6) தொடக்கம் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் பற்றி விசாரிக்கவும் அல்லது நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும் இந்த இலக்கத்தை பொதுமக்கள் பாவிக்கமுடியும்
.

இந்த அவசர தொடர்பு இலக்கம் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட ஏழு நாட்களும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்