Sun. Apr 28th, 2024

டிரம்புக்கு 2வது முறையாக நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனை.. என்ன முடிவு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக வெள்ளை மாளிகையின் மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒரே நாளில் 960 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6062 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று ஒரேநாளில் 29 874 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 244877 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. பல முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள், தொழில் அதிபர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் டிரம்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் டிரம்புக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மருத்துவர் கான்லி கூறினார். 15 நிமிடங்களில சோதனை முடிவுகள் வெளியாகியது. இதில் டிரம்ப் முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிரம்ப் தனக்கு கொரோனாவைரஸ் பரிசோதனை செய்து கொண்டார். அப்போதும் அவருக்கு நெகட்டிவ் என்றே வந்தது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்