Sat. Apr 27th, 2024

செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலை திறக்க உத்தேசம்

செப்டம்பர் முதல் வாரத்தில் நாட்டில் பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது அளவை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் படி மற்றும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் கீழ் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றார்.

எனவே, செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் முழு ஆதரவையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்