Fri. Mar 29th, 2024

வடமாகாண பிரதம செயலாளரின் கன்னி உரை

மக்களுக்காக சேவையாற்றுபவர்களுக்கு மொழி தடையில்லை என வடமாகாண பிரதம செயலாளரா கடைமையை பெறுப்பேற்ற சமன் பந்துலசேன இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் .

நான் சிங்களவராக இருந்தாலும் தமிழ் பிரதேசத்தில் எந்தவொரு இடையூறும் இருக்காது என நம்புகிறேன். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு மொழி அவசியமில்லை.  என வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் பிரதம செயலாளராக இன்று திங்கட்கிழமை கடமையேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வவுனியா மாவட்ட செயலாளராக கடமையாற்றி இருந்தேன். தமிழ், சிங்களவர்கள் உட்பட பல மதங்களை சார்ந்தவர்களும் வவுனியாவில் வசித்தனர். அவர்களுடன் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கடமையாற்றியுள்ளேன். மக்களுக்காக கடமையாற்றும் போது , மொழி , இனம் என்பன தடையாகவோ பிரச்சனையாகவோ இருக்கப்போவதில்லை என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்