Sat. Apr 27th, 2024

சாவகச்சேரி பிரதேச சபையின் அசமந்த போக்கும், திட்டமிடப்படாத கழிவு முகாமைத்துவ மும் – மக்கள் விசனம்

சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட பொது இடங்களில் பொறுப்பற்ற விதமாக கழிவுகளைக் கொட்டுவதும்
திட்டமிடப்படாத கழிவு முகாமைத்துவமும் சுகாதார சீர்கேட்டை உருவாக்குகின்றன. இதனை உரியவர்கள் கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாவகச்சேரி தனங்கிழப்பு வீதியின் ஒரமாக வீதி நெடுகிலும் கடல்நீரேரியை அண்டி ஏராளமான உக்கும், உக்காத கழிவுகள்  சிலரால் தெடர்ந்தும் கெட்டப்பட்டு வருகின்றது. இதனால் சூழல் வெகுவாக மாசுபட்டு துர்நாற்றம் ஏற்படுவதோடு பிதேசத்தின் அழகும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப்குதியில் தொடர்ச்சியான கழிவுகளை அகற்றும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது காணப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தநிலை சாவகச்சேரி நகரிலிருந்து தனங்கிழப்புச் சந்தி வரையிலும் மற்றும் தனங்கிழப்புச் சந்தியிலிருந்து பூநகரி எல்லை வரை தெடர்கிறது.
மேலும் தனங்கிழப்பு பூநகரி வீதியில் அமைந்துள்ள இறுதிக் கழிவகற்றும் நிலையமும் முழுமையான எல்லைப்டுத்தலின்றி கழிவுகள் பொருத்தமான இறுதிக் கழிவகற்றல் முறைகளுக்கு உட்படுத்தப்படாமல் மிக மோசமாக காணப்படுகிறது.
மனித மலக்கழிவானது திறந்தநிலையில் சனநடமாட்டமுள்ள நேரத்தில் உள்ளூராட்சி சபையின் கழிவகற்றும் வாகனத்தால் கொட்டப்படுவதோடு ஏராளமான பொலுத்தீன் கழிவுகளும் கண்டபடி அப்பகுதியில் கொட்டப்பட்டு பிதேசமெங்கும் பரந்து காணப்படுவதோடு அவை சூழலை மாசாக்கும் விதமாக அவ்வப்போது எரியூட்டவும்படுகின்றன.
அத்துடன் கெல்களக்கழிவுகளும் பாதுகாப்பற்ற முறையில் கெட்டப்பட்டு பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்