Wed. May 1st, 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா பகுதிகளிலும் திட்டங்கள் முன்னெடுப்பு

வவுனியா  பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கோவில்புளியங்குளம் கிராமசேவையாளர் பிரிவிலுள்ள   ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் 70 மாணவர்களுக்கு,
சீருடைகள் வழங்கப்பட்டதுடன் மாதாந்தம் சத்துணவுகளுக்கான நிதியாக 10  ஆயிரம் ரூபா  நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கணேசபுரம் கிராமசேவையாளர் பிரிவிலுள்ள  அறநெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் 65 மாணவர்களுக்கும்,
சீருடைகளும், மாதாந்த சத்துணவுகளுக்கான நிதியாக 15 ஆயிரமும்  வழங்கப்பட்டுள்ளதுடன்
அவ் அறநெறி பாடசாலை  கட்டிடம் அமைப்பதற்கான முதலாம்  கட்ட நிதியாக 75 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.
இதேவேளை  கணேசபுரத்திலுள்ள  திருமூலர் அறநெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் 60 மாணவர்களுக்கு,
மாதாந்தம் சத்துணவுக்கான நிதிதாக ரூபா 15000/- வழங்கப்பட்டதுடன்  சீருடைகளும்  வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் வவுனியா கூமாங்குளம் கிராமத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம்  ரூபா பெறுமதியில் வீட்டிற்கான கூரை திருத்தத்திற்க்கான நிதியும் வழங்கப்பட்டது.
இவ் உதவித் திட்டங்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில்
சமூக செயற்பாட்டாளர்
இ.தயாபரன், செட்டிக்குளம்  கலாச்சார உத்தியோகத்தர்  சி.கயேந்திரகுமார்,
வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் ம.சுஜேந்நிரன்  ஆகியோருடன் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அறநெறி பாடசாலைகளின் நிர்வாகிகள், அறநெறி பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்