Thu. May 9th, 2024

க.பொ.த.சா/த பரீட்சை நடாத்துவதில் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது எனப் பரீட்சை கள் திணைக்களம் தெரிவித்துள்ளது . நாட்டில் நிலவி வரும் அமெரிக்க டொலர் தட்டுப் பாட்டால் இந்த நிலைமை உரு வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு முடியாத நிலைமை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரண தரப் பரீட்சையை கொவிட் காரணமாக மே மாதம் 23 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது . சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்  இந்தப் பரீட்சையில் தோற்ற உள்ளனர் . அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் போதும் பரீட்சைகள் திணைக்களத்திடம் போதியளவு கடதாசிகள் கையிருப்பில் இருக்கவில்லை எனவும் , அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் கடதாசி பெற்றுக் கொண்டே பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடப்பட்டன எனப் பரீட்சை திணைக்கள அதிகாரி யொருவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார் . இதேவேளை , கடதாசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது எனவும் அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல் . எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்