Mon. Apr 29th, 2024

கோத்தபாய ஆதரவு முடிவு , கொதித்தெழும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் ஸ்ரீ.ல.சு.க.வின் முடிவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் ஸ்ரீ.ல.சு.க பொது செயலாளர் தயசிறி ஜெயசேகராவுக்கு அனுப்பிய கடிததில் தெரிவித்துள்ளதாவது

எங்கள் அமைப்பாளர்களில் 90% க்கும் அதிகமானோர் மொட்டு சின்னத்துக்கு எதிரானவர்கள் என்று கூறும்போது கோட்டாவை ஆதரிக்க நீங்கள் எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்? இது ஸ்ரீ.ல.சு.க.வின் முழுமையான துரோகம்.

கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறேன் என்று மைத்ரீ கூறியிருந்தால், தலைவர் பொறுப்பை ஏற்கவும், கட்சியை மீண்டும் கட்டமைக்கவும் நாங்கள் உங்களுக்கு உதவி இருப்போம்

நாங்கள் யூ.என்.பி மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்ததால் எங்கள் கட்சி பலவீனமாக இல்லை. எங்கள் தலைவருக்கு கூட்டணியை வழிநடத்தும் வலிமையும் பார்வையும் இல்லாததுடன் , ராஜபக்சர்களின் சூழ்ச்சிளில் ஏமாற்றப்பட்டு , கட்சியின் நல்லதை அழித்தும் மற்றும் கட்சியை குழப்பியதுமே காரணமாகும்.

அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் திறமை மைத்ரிக்கு இருந்திருந்தால், இலங்கை சுதந்திரக் கட்சியை (எஸ்.எல்.எஃப்.பி) கட்டமைத்து, ராஜபக்ஷர்களின் கொலை மற்றும் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால் நாடும் ஸ்ரீ.ல.சு.கவும் மிகவும் வலுவாக இருந்திருக்கும்.

எனவே, இலங்கை சுதந்திரக் கட்சியில் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் அறியப்பட்ட நபராக நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக மதிப்புமிக்க கட்சி அழிக்க விடாதீர்கள், என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்