Fri. Apr 26th, 2024

குண்டு போடுதலில் வரலாற்று சாதனையை பதிவு செய்த சாருஜன்

இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குண்டு போடுதல் போட்டியில் மன்/இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.சாருஜன் வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி பாடசாலையின் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் மன்/இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.சாருஜன் 13.47 மீற்ரர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்