Fri. Apr 26th, 2024

கூட்டமைப்பு உறுப்பினர் எதிர்ப்பு பருத்தித்துறை பாதீடு தோல்வி

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியை தலைவராக கொண்டபருத்தித்துறை நகரசபை பாதீடு குறித்த கட்சியின் உறுப்பனர் ஒருவரின் எதிரான வாக்குப் பதிவினால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட பாதீடு எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவுள்ளது.
பருத்தித்துறை நகர சபை அபிவிருத்தி பணிகளில் திருப்தி அடையாத கூட்டமைப்பு கட்சி உறுப்பினர் ஒருவர் எதிராக வாக்களித்துள்ளார்.

பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்று  காலை 9:30 மணிக்கு நகரபிதா இருதயதாஸ் தலமையில் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்க்கு ஏக மனதாக அங்கீகரிக்குமாறு தவிசாளரால் கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு நடாத்தாப்பட வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கோரிக்கை விடுத்த நிலையில் நகர சபை செயலாளரால் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

 
இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்  6 பேரும், தமிழ் தேசிய  கூட்டமைப்பு உறுப்பினர்  ஒருவரும்,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஒருவருமாக  வ ஆக 8 பேர் எதிராக வாக்களித்தனர்.
ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேரும், தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் ஒருவர், சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர், ஈழ மக்கள் ஜநாயக கட்சி உறுப்பினர் ஒருவருமாக மொத்தம் ஏழு பேரும் வாக்களித்தனர். இதன் அடிப்படையில் நகர சபை செயலாளர் வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தனக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மீள திருத்திய பாதீட்டை எதிர்வரும் 12ம் திகதி மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட பாதீடு வாசிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்