Thu. May 2nd, 2024

கிளிநொச்சி செல்லும் மஹிந்த அணி எம்.பிக்கள்!!

நாட்டின் எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று வடமாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழவொன்று கிளிநொச்சிக்குச் செல்வவுள்ளது. கிளிநொச்சியில் பொதுஜனபெரமுனவின் அலுவலகத்தினை திறந்து வைப்பதற்காகவே இக்குழு செல்கின்றது.
கிளை அலுவலகம் காலை 10 மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அருகில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனையடுத்து பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்