Tue. May 7th, 2024

கமலை ஒருமையில் பேசிய சரவணன்-பிக் பாஸ் இலிருந்து வெளியேற்றம் -திடீர் திருப்பம்

பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் திடீரென நேற்று விலக்கப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம்நிகழ்ச்சியின் முடிவில்   கான்பெசன் ரூம் வழியாக வெளியேற்றப்படுள்ளார் .  இதற்கான காரணகளாக பல யுகங்கள் வெளியிடப்படு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கமல் முன்னிலையில் காலேஜ் படிக்கும்போது பஸ்சில் பெண்களை உரசி உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த விஷயம் பின்னர் பெருசாகியதில் பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

ஆனாலும் இதை ஏற்க விரும்பாத பிக் பாஸ் நிர்வாகம் அவரை நேற்றைய தினம் வெளியேற்றியதாக தகவல்கள் வந்தன.
இது இவ்வாறு இருக்க, கமல் சார் ஐ , சரவணன் ஒருமையில் பேசியதாக வீடியோ கிளிப் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் சரவணன் கமல் சார்ஐ ” கோர்த்து விடுறான் ” என்று ஒருமையில் தெரிவிக்கிறார்.

 

இது கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற கூடுவிட்டு கூடு பாயும் டாஸ்கின் பொது கமல் சார் செரின் மற்றும் லொஸ்லியாவுடன் உரையாடும் பொழுது இடம்பெற்றுள்ளது. இதனால் தான் சரவணன் வெளியேற்றப்பட்டதாகவும் இது மற்ற போட்டியாளர்களுக்கும் ஒரு படிப்பினையாக வேண்டும் என்றே பிக் பாஸ் நிர்வாகம் முடிவெடுத்ததாகவும் இந்த தகவல் கல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சேரனை கூட ஒரு டாஸ்கின் பொது சரவணன் அவரை ஒருமையில், ” அப்படிதாண்டா பேசுவேன் ” என்று குறிப்பிட்டு இருந்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்