Thu. May 2nd, 2024

ஏப்ரல் மாத ராசி பலன் 2020: மிதுனம், கடகம், சிம்மம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே உங்க ராசிக்குள் ராகு, தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சூரியன் மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், களத்திர ஸ்தானத்தில் கேது எட்டாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு என கிரகங்கள் கூடி இருக்கின்றன. ஏப்ரல் உங்களுக்கு கிரகங்கள் சில சாதகமாகவும் சில சாதகமற்ற நிலையிலும் இருக்கின்றன என்றாலும் இப்போது இருக்கிற சூழ்நிலை உடல் ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள். இப்போதைய சூழ்நிலையில் நமக்கு உடல் ஆரோக்கியமும் பாதுகாப்பும்தான் ரொம்ப முக்கியம். ரொம்ப நெகடிவ் ஆக யோசிக்க வேண்டாம் எதையும் பாசிட்டிவ் ஆகவே திங்க் பண்ணுங்கள்.

எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம். அந்த இடத்தில சனி, குரு, செவ்வாய் இருக்கிறது. நிறைய பேர் வீட்டோட இருக்கிறீர்கள். வாய் பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்கள் வம்பு வராம பார்த்து கொள்ளுங்கள் குடும்பத்தில எல்லோரும் சேர்ந்து இருப்பதால நீங்க உற்சாகமாக இருங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். வண்டி வாகனத்தை வீட்டை விட்டு வெளியே எடுக்கவே எடுக்க வேண்டாம். விபத்து காரகன் செவ்வாய் எட்டில் இருக்கிறார். செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதுதான் உங்களுக்கு பிரச்சினை. கடன் தொல்லை வரும், நோய்கள் ஏற்படலாம் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள்.

கோபத்தை கட்டுப்படுத்துங்கள். நிறைய தியானம் பண்ணுங்கள். சில நேரங்களில் அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும் பொறுமையாக இருங்கள். ரொம்ப கூலா குடும்பத்தை ஹேண்டில் பண்ணுங்கள். காரமான உணவுகளை இரவு நேரத்தில சாப்பிட வேண்டாம். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். என்னடா இந்த மாதம் இப்படி இருக்கேன்னு நினைக்கறீங்களா? கவலைப்படாதீர்கள் இந்த மாதம் போல அடுத்த மாதம் இருக்காது பாதிப்புகள் குறைந்து பலன்கள் அதிகமாகும்.

கடகம்

கடகம் ராசிக்கு கிரகங்களில் சில சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கிறது. 12ஆம் வீட்டில் ராகு, 11ஆம் வீட்டில் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிலும் பத்தாம் வீட்டிலும் சூரியன் சஞ்சரிக்கிறார். புதன் சஞ்சாரம் எட்டு, ஒன்பது பத்தாம் வீடுகள் வரை இருக்கிறது. ஆறாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த மாதம் வேலையில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்க ஆற்றல் அதிகமாகும். உங்க வருமானம் அதிகமாகும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். எதையும் எடுத்து செய்யக்கூடிய திறமை அதிகமாகும். குடும்ப வாழ்க்கையில கவனமாக இருங்கள். சும்மாவே கொரோனா பயத்தில எல்லோரும் வீட்டோட முடங்கி இருக்கிறீர்கள். ஒரே வீட்ல ஒண்ணா இருப்பது போல உங்க களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் சனி, குரு சேர்ந்து சஞ்சரிப்பதால ரொம்ப கவனமாக இருங்கள். உங்க பெர்சனல் வாழ்க்கையில விட்டுக்கொடுத்து போங்கள்.

திருமணம் செய்தவர்கள், காதலிப்பவர்கள் தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம். சொந்த வாழ்க்கையில பிரச்சினை வரப்போகுது அதே நேரம் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளியே இணக்கமான சூழ்நிலை நிலவும். லாபாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில ஆட்சி பெற்று அமர்வது ரொம்ப நல்ல விசயம். உங்க தொழில்ல லாபம் கிடைக்கும். உங்க நிதி நிலைமை இந்த மாதம் நல்லாவே இருக்கும். அரசு துறை, மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகம் வரும்.

உங்க தனாதிபதி சூரியன் மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டில் உச்சம் பெறப்போகிறார். இதனால் தன வரவு அதிகமாகும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வீட்டில் இருந்தே வேலை செய்தாலும் வேலைப்பளு அதிகமாகும். இந்த மாதம் திருமண பேச்சுவார்த்தைகள் வேண்டாம். புதன் பகவான் உங்களுக்கு இந்த மாதம் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டார். குரு பார்வை உங்களுக்கு கிடைப்பது நேர்மறை எண்ணம் அதிகமாகும். சகோதரர்கள், சகோதரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரசு துறையில் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அற்புதமாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு இந்த மாதம் எட்டாம் வீட்டில் சூரியன் ஆறாம் வீட்டில் செவ்வாய், சனி, குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் கேது ஏழாம் வீட்டில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாத முற்பகுதியில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் காரணம் எட்டாம் வீட்டில் உங்கள் ராசி அதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். கோபமாக பேசாதீர்கள். வண்டி வாகனங்களில் வெளியே போகவே போகாதீர்கள். போனாலும் அடிதான் விழும் வீட்டுக்குள்ள இருக்கும் போதும் சண்டை சச்சரவு வீணான விவாதங்கள் வரும் கவனமாக பேசுங்கள். இப்ப இருக்கிற சூழ்நிலையில ரொம்ப அமைதிய இருங்கள்.

ஆறாம் வீட்டில் செவ்வாய் சனி, குரு கூட்டணி உங்களுக்கு சில தடைகள் வரலாம். எதிரிகள் தொல்லை நீங்கும் அதே நேரத்தில் குருவும் அங்கு மறைந்து இருப்பதால் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எதிர்ப்பும் தடைகளும் ஏற்படும். சூரியன் மாத பிற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் உச்சமடைகிறார். சுக்கிரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று மாளவியா யோகம் தருகிறார். பிசினஸ்ல நல்ல வெற்றிகள் கிடைக்கும் அதிர்ஷ்டம் தேடிவரும். புதிய வேலைகள் கிடைக்கும். சில சமயங்களில் வேலை பிசினஸ் எல்லாம் குழப்பமாகவே இருக்கும் மனதில் தளர்ச்சி அடையாதீங்க இன்றைக்கு உலகமே ஒரு பீதியிலயும் குழப்பத்திலயும்தான் இருக்குது எனவே கவலைப்படாதீங்க. மாணவர்கள் படிப்பில கவனமாக இருங்கள். மாறி மாறி அட்வைஸ் கொடுப்பாங்கள். நீங்க யோசிங்க மாத இறுதியில் உச்சம் பெற்ற சூரியனுடன் புதன் இணையும் போது நல்ல முடிவாக எடுங்கள். நின்னு நிதானித்து யோசித்து முடிவு பண்ணுங்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்