Fri. May 17th, 2024

கரவெட்டி பிரதேச செயலரின் மக்கள் நல செயல்பாடு

30.03.2020 இன்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால் கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாரூபன் பிரதேச செயலகத்திலிருந்து தனது கடமைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார். நடமாடும் வியாபாரிகள் கூடுதலான விலையில் பொருட்களை கொண்டு சென்று வாகனத்தில் விற்பனை செய்வதாக முறைப்பாடு அவருக்கு கிடைத்துள்ளது. நேரடியாக விற்பனை செய்யும் இடங்களுக்குச் சென்று வாகன சாரதிகளை எச்சரிக்கை செய்து வாகனங்களில் விற்பனை செய்யச் கொண்டுசெல்லும்போது கிராமங்களுக்கு விலைக் கட்டுப்பாட்டு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வழமையாக வியாபாரம் செய்தவர்களுக்கு வியாபாரம் செய்வதற்கான பாஸ் வழங்குகின்றார். கூடுதலான விலையில் விற்பனை செய்பவர்களுக்கு அவர்களுடைய பாஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார். கரணவாயிலுள்ள அந்தரன் சந்தையில் கூடுதலான விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக முறைப்பாடுசெய்து உள்ளார்கள். பிரதேச செயலரிடம் பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதுதான் அவர்களுடைய நிலைப்பாடு எனக்கு முறைப்பாடுகள் தொடர்ந்து வருமானால் மாற்று வழிகள் செய்ய வேண்டி நிலை ஏற்படும் எனவும் கடுமையாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார். வடமராட்சியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது தற்காலிகமாக இடைநிறுத்த வியாபாரிகளிடம் கேட்டுள்ளார். வடமராட்சி பகுதியில் விவசாய பயிர்கள் இப்பகுதி மக்களுக்கு போதிய அளவு பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் விவசாய பொருட்களையும் உணவு பொருட்களையும் வழங்குமாறும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி உணவுப் பொருட்களை வழங்குமாறு எடுத்துக் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்