Fri. May 10th, 2024

எல்லேயில் அசத்தியது சென்பற்றிக்ஸ் கல்லூரி

சிறந்த களத்தடுப்பு மூலம் சென்பற்றிக்ஸ் கல்லூரி அணி  சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் யா/சென்பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் இன்று  வெள்ளிக்கிழமை சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் சென்பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணி  27பந்துகளில் சகல இலக்குகளையும் இழந்து ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றனர். அவ்வணி சார்பில் கபில்ரன் ஒரு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்பற்றிக்ஸ் கல்லூரி அணி 12 பந்துகளில் இரு ஓட்டங்களைப் பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். அவ்வணி சார்பில் இனியவன், நிசான் ஆகியோர் ஒவ்வொரு ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்