Fri. May 3rd, 2024

எதிர்வரும் 16ஆம் திகதி இரவு 8 மணிக்கு மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு

எதிர்வரும் 16ஆம் திகதி இரவு 8 மணிக்கு மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்கு தளரும்.
ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்