Fri. Apr 26th, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு அரசாங்கமும் அமைச்சர்களும் பொறுப்பு-பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு அரசாங்கமும் அமைச்சர்களும் பொறுப்பு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் தெரிவித்தார். அரசாங்க தரப்பில் பிழைகளும் , குறைபாடுகளும் இருந்துள்ளன. இதனால் தான் பயங்கரவாதிகளால் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பிரதமர் மற்றும் மூன்று அமைச்சர்கள் தெரிவுக்குழுவின் முன் தோன்றி வாக்குமூலம் வழங்கினார்கள். மேலும் இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் 2018 அக்டோபர் மாதத்திற்கு பின்னர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
புலனாய்வு தகவல்களை தான் சட்டம் ஒழுங்கு அமைச்சரின் ஊடாக பெற்றுக்கொண்டதாகவும், சஹ்ரான் பற்றிய தகவல்கள் கூட அதில் இருந்ததாக குறிப்பிட்ட பிரதமர், தாக்குதல் தொடர்பான எந்த புலனாய்வு தகவல்களும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட் டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்