Fri. May 3rd, 2024

உயிர்காப்பு பயிற்சி பாட நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

உயிர்காப்பு பயிற்சி பாட நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 2ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 30 வீரர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சானது இலங்கை உயிர்காப்பு சங்கத்துடன் இணைந்து சர்வதேச ரீதியிலான உயிர்க்காப்புப் பயிற்சி பாடநெறி ஒன்றை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கவனம் செலுத்தி நடாத்தவிருக்கின்றது. இப் பயிற்சியானது வேலை இல்லாத 18 – 35 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும், நீச்சல் திறன் உடைய இளைஞர்களுக்கும் பொருத்தமானதாக அமையும். மேலும் 8 நாட்களைக் கொண்ட இப்பயிற்சியானது தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் போன்ற மொழிகளில் கற்பிக்கப்படும். அத்துடன் இப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றிய அனைத்து பயிலுனர்களுக்கும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட International Life Saving (ILS) சான்றிதல், Pool Life Guard Licence, தேசிய இளைஞர் படையணியின் சான்றிதழ் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி அமைச்சின் பங்குபற்றல் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.  பயிற்சிக்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம், மேலும் அனைத்து விண்ணப்பங்களும் 2022 மார்ச் 02 ஆம் திகதிக்குள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரிடமோ விளையாட்டு உத்தியோகத்தரிடமோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆரம்ப தேர்வு பரீட்சைக்கு எதிர்வரும் 3,4,5 மற்றும் 6ம் திகதிகளில் கிளிநொச்சி தேசிய விளையாட்டு மைதான நீச்சல் தடாக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு :-
 சிவா ஜிவிந்தன் (விளையாட்டு உத்தியோகத்தர் மருதங்கேணி, தேசிய நீச்சல் பாதுகாப்பு வீரர்)
0776534514

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்