Fri. May 3rd, 2024

இமையாணன் மத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

வடமராட்சி கால்பந்தாட்ட தொடரில்
இமையாணன் மத்தி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வதிரி பொம்பேர்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்தினை எதிர்த்து கலட்டி ஐக்கிய சனசமூக விளையாட்டு கழகம்  மோதியது. இதில் இமையாணன் மத்தி அணி வீரர்கள் அலக்சன் 3 , அஸ்வின் 1 , டிவிசன் 1 கோலையும், கலட்டி ஐக்கிய சனசமூக விளையாட்டு கழக வீரர் சிந்துஜன் ஒரு கோலையும் போட ஆட்ட நேர முடிவில் இமையாணன் மத்தி அணி 5:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்