Sun. May 5th, 2024

இன்று முதல் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ள அம்மை தடுப்பூசி

அதிக ஆபத்துள்ள ஒன்பது சுகாதார மாவட்டங்களில் உள்ள அனைத்து நோய்த்தடுப்பு கிளினிக் நிலையங்களிலும் அம்மை (measels ) (MMR) நோய்த்தடுப்பு நடவடிக்கையை சுகாதார அமைச்சு இன்று தொடங்கியது.

இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் கொழும்பு (CMC பகுதி உட்பட), கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகியவை அடங்கும்.

காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, தொற்றுநோயியல் பிரிவு தலைமையிலான இந்தத் தடுப்பூசித் திட்டம், ஏப்ரல் 7, 2023 க்கும் ஜூலை 5, 2023க்கு இடையில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது

6 முதல் 9 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு அம்மைக்கு எதிரான கூடுதல் தடுப்பூசி அளவை வழங்குவதற்கான முடிவு கடந்த ஆண்டில் அம்மை நோய் தாக்கம் அதிகளவில் இருந்ததனால் எடுக்கப்பட்ட்து

இந்த தடுப்பூசி(MMR ) திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இது நாடு முழுவதும் உள்ள மற்ற வயதினருக்கும் நீட்டிக்கப்படுகிறது.

தற்போதைய MMR தடுப்பூசி கூடுதல் அளவில் வழங்கப்படவுள்ளது , மேலும் SIA-MMR தடுப்பூசியைப் பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் 9 மாதங்கள் மற்றும் 3 வயது முடிந்தவுடன் வழக்கமான MMR தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்