Sat. Apr 27th, 2024

இங்கிலாந்தில் கோரோனோவுக்கு அதிகம் பலியாகும் தெற்காசிய மக்கள் – அதிர்ச்சி ஆய்வு முடிவு

பிரித்தானியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தெற்காசிய மக்கள் கொரோனா வைரஸால் இறக்க அதிக வாய்ப்புள்ளது என்று முக்கிய ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது
மருத்துவமனையில் இறப்பு அபாயம் உள்ள ஒரே இனக்குழு இதுவாகும் என்றும் இது நீரிழிவு நோயால் ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது

கோவிட் -19 உள்ள அனைத்து மருத்துவமனை நோயாளிகளிடமிருந்தும் நான்கில் 10 பேரின் தரவை மதிப்பீடு செய்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த முடிவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது

இந்த முடிவின் மெல்லாம் தற்பொழுது உள்ள நடைமுறைகளான , யாரை பாதுகாப்பது மற்றும் யாருக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிப்பது போன்ற கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது

பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகள் மற்றும் 260 மருத்துவமனைகள் உட்பட இங்கிலாந்து முழுவதும் இருபத்தேழு நிறுவனங்களும் இந்த ஆய்வில் ஈடுபட்டன.

ஆய்வு முடிவுகள் ஒரு மருத்துவ இதழில் முறையாக வெளியிடப்படுவதற்கு முன்னர் ஆன்லைனில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே இந்த ஆய்வின் முக்கியத்துவம் கருதி , முடிவுகள் ஒரு மாதத்திற்கு முன்னர் இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

யாராவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் என்ன நடக்கும் என்பதை மட்டுமே இந்த ஆய்வு நமக்குக் கூறுகிறது, அவர்கள் வைரஸைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதா இல்லையா என்பதை அல்ல.

இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 260 மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 35,000 கோவிட் -19 நோயாளிகளை மே மாதம் நடுப்பகுதி வரை ஆய்வுக்கு உட்படுத்தி முடிவை வெளியிட்டுள்ளது .

“தெற்காசியர்கள் நிச்சயமாக மருத்துவமனையில் கோவிட் -19 இலிருந்து இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று , கறுப்பின குழுவில் இவ்வளவு வலுவான தாக்கத்தை காணவில்லை என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எவன் ஹாரிசன் தெரிவித்தார்.

தெற்காசிய பின்னணியைச் சேர்ந்தவர்கள் வெள்ளையர்களை விட 20% அதிகமாக இறக்க நேரிட்டுள்ளது என்றும் , பிற சிறுபான்மை இனக்குழுக்களில் இந்தளவுக்கு ஈர்ப்பு விகிதம் இருக்கவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது

இந்த ஆய்வின் முடிவில் ..
கோவிட் -19 க்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் ஒவ்வொரு 1,000 வெள்ளை மக்களில் 290 பேர் இறக்கின்றனர்
கோவிட் -19 க்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் ஒவ்வொரு 1,000 தெற்காசிய மக்களில் 350 பேர் இறக்கின்றனர்
இனத்தின் அடிப்படையில் யாருக்கு மருத்துவமனை பராமரிப்பு தேவை என்பதில் ஆழமான வேறுபாடுகளையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது .

“மருத்துவமனையில் உள்ள தெற்காசிய மக்கள் வெள்ளை மக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள்” என்று பேராசிரியர் ஹாரிசன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “அவர்கள் சராசரியாக 12 வயது இளையவர்கள் என்றும் , இது மிகப்பெரிய வித்தியாசம் என்று தெரிவித்த அவர் , அவர்களுக்கு முதுமை, உடல் பருமன் அல்லது நுரையீரல் நோய் போன்ற பிரச்சினைகல் இல்லை என்றும் , மிக அதிக அளவு நீரிழிவு நோய் தாக்கத்தினாலேயே இந்த இறப்பு விகித அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

தெற்காசிய நோயாளிகளில் சுமார் 40% பேர் டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோயைக் கொண்டிருந்தனர் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்