Thu. May 2nd, 2024

அவசரமாக கூட்டப்படும் செயற்குழு , அதிரடி காட்டுமா சுதந்திர கட்சி

ஜனாதிபதிக்கும் எதிர்கட்சி தலைவர் தலைமையிலான குழுவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய சுதந்திர கட்சியின் செயற்குழு அவசரமாக கூட இருப்பதாக கட்சியின் பொது செய்லாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ,ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது. கடைசி வரை கோத்தாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவார் என்ற நிலைபாட்டிலேயே மஹிந்த குழுவினர் விடாப்பிடியாக இருந்தனர்

அனால் சுதந்திர கட்சி பழமை வாய்ந்த கட்சி என்பதால் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்பொழுது உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதனால் எந்த விதமான இணக்கப்பாடும் காணப்படாத நிலையில் ராஜபக்சவினர் இருக்கியா முகத்துடன் பேச்சுவார்த்தையை விட்டு வெளியேறியதாகதெரிகிறது. இதனால் சுதந்திர கட்சியின் ஆதரவு யாருக்கென்று உறுதிபட தெரியாத நிலையுள்ளது. ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவும் ஆதரவு கோரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்