Sat. May 4th, 2024

அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

1AB பாடசாலை அதிபர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளான பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி,  பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர் தர பாடசாலை,  வலிகாமம் கல்வி வலயத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆகிய பாடங்களுக்கான அதிபர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தமது வலயக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று வலயக் கல்வி பணிப்பாளரின் சிபார்சுடன் எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக செயலாளர்,  கல்வி அமைச்சு,  வடமாகாணம்  செம்மணி வீதி,  நல்லூர்,  யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்