Sun. Apr 28th, 2024

அச்சுவேலி தனியார் பேருந்து சங்கத்தினர் வேண்டுகோள்

தமது பேருந்து சேவை நேரத்தை 2 நிமிடங்கள் அதிகரித்துத் தருமாறு அச்சுவேலி தனியார் பேருந்து சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆவரங்கால் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தை அடைவதற்கு 30 நிமிடங்கள் வரையறுக்கப்பட்ட நிலையில் தமது சேவை நேரத்தை 2 நிமிடங்களால் அதிகரித்துத் தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அச்சுவேலி தனியார் பேருந்து சங்கத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அச்சுவேலியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கிய சேவை குறுகிய சேவையாகும். இதனால் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி, அச்சுவேலி மத்திய கல்லூரி, ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம்,  ஆவரங்கால் நடராஜ இராமலிங்கம வித்தியாலயம், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி உட்பட யாழ் நகர் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்குவதில் நேரம் போதாமல் உள்ளது. இதனால் எமது சேவையை திருப்திகரமாக செய்ய முடியாதுள்ளது.
அத்துடன் எமது சங்கத்தில் 60 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இதனை நம்பி சாரதி மற்றும் நடத்துநர்களில் குடும்பங்கள் தங்கி வாழ்கின்றனர். வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நேரத்தில் பெருமளவான பயணிகள் பேருந்துகளில் நெருக்கடிகளின் மத்தியிலேயே பிரயாணம் செய்கின்றனர். இதனை தவிர்ப்பதற்கு 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படால் பயணிகளின் அசெளகரியங்களை தவிர்க்க முடியும். இதற்கு யாழ்மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்