Tue. Apr 30th, 2024

ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி, இம்ரான் கான்

ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையாக முடிந்துள்ளது

பாகிஸ்தானில் அபோதாபாத் என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே 2ம் தேதி கொல்லப்பட்டார். அமெரிக்கா ராணுவம் இரவோடு இரவாக அவரின் வீட்டிற்குள் புகுந்து அவரை சுட்டுக்கொன்றது.
பின்லேடன் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் உலக நாடுகளை ஏமாற்றி வந்தது. பாகிஸ்தானுக்கே தெரியாமல் அமெரிக்கா தனது படைகளை உள்ளே அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருக்கிறார். அதில், அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். அவர் ஒரு தியாகி. அமெரிக்க ராணுவம் அபோதாபாத் உள்ளே வந்தது. பாகிஸ்தானையே கேட்காமல் அத்துமீறியது. இதனால் ஒசாமா வீரமரணம் அடைந்தார். இதனால் இரண்டு நாட்டு உறவு மோசமாக பாதிக்கப்பட்டது.

அதன்பின் உலகம் முழுக்க பாகிஸ்தானை எதிர்த்தது. பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாக பேசியது. பாகிஸ்தானின் நட்பு நாடாக இருந்த அமெரிக்கா எங்களிடம் அறிவிக்காமல் எங்கள் எல்லைக்குள் வந்து இருக்கிறது. எங்களிடம் கேட்காமல் எங்களின் நட்பு நாடு ஒன்று எல்லைக்குள் உள்ளே வந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது . இதை நாங்கள் எப்படி எடுத்துக் கொள்வது.
இந்த தீவிரவாத போரில் மட்டும் நாங்கள் 70 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்து இருக்கிறோம். ஆனாலும் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் மோசமான, அவமானத்திற்கு உரிய கருத்துக்களை பேசி வருகிறது. பாகிஸ்தான் மீது அமெரிக்கா அத்துமீறி டிரோன் தாக்குதலை நிகழ்த்தியது. எங்களிடம் அனுமதி கேட்காமல் எங்கள் எல்லைக்குள் வந்து தொடர்ந்து அமெரிக்கா டிரோன் தாக்குதல்களை நிகழ்த்தியது.

தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா செயல்பட பாகிஸ்தான் உதவியது. ஆனால் பாகிஸ்தானுக்கு மிஞ்சியது எல்லாம் அவமானம் மற்றும் புறக்கணிப்புதான். பாகிஸ்தானை அமெரிக்கா நட்பு நாடாக பார்க்கிறதா அல்லது எதிரி நாடாக பார்க்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் மீது பழியை தூக்கி போடுவதில் அமெரிக்கா கவனமாக இருப்பது மட்டும் தெரியும் என்று இம்ரான் கான் பேசி இருக்கிறார்.
கடும் அதிர்ச்சி இந்த நிலையில் இம்ரான் கானின் பேச்சு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் வெளிப்படையாக அமெரிக்காவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது. அதிலும் மிக முக்கியமாக, ஒசாமாவை தியாகிஎ ன்றெல்லாம் சொல்லி தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசி உள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் பகீர் நிலைப்பாடு காரணமாக அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்