Thu. Apr 25th, 2024

கொரோனா வைரஸை “ஒருபோதும் ஒழிக்கமுடியாது ” என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது

புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசிய WHO அவசரகால இயக்குனர் டாக்டர் மைக் ரியான் வைரஸ் எப்போது மறைந்துவிடும் என்று கணிக்க முயற்சிப்பதை எச்சரித்தார்.

ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், வைரஸைக் கட்டுப்படுத்த “பாரிய முயற்சி” தேவைப்படும் என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 300,000 பேர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதுடன் , மேலும் 4.3 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்து அதிர்வலையை ஏற்படுத்தினார்

இந்த வைரஸ் எங்கள் சமூகங்களில் உள்ள மற்றொரு வைரஸாக மாறக்கூடும், மேலும் இந்த வைரஸ் ஒருபோதும் வெளியேறாது” என்று டாக்டர் ரியான் ஜெனீவா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“எச்.ஐ.வி நீங்கவில்லை – ஆனால் நாங்கள் வைரஸைப் புரிந்துகொண்டு வாழக்கற்றுக்கொண்டோம் .”

மேலும் தெரிவித்த அவர் , “இந்த நோய் எப்போது மறைந்துவிடும் என்பதை எவரும் கணிக்க முடியும்” என்று தான் நம்பவில்லை என்றார்.

தற்போது 100 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனையில் உள்ளன – ஆனால் அம்மை போன்ற பிற நோய்கள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தபோதிலும் இன்னும் உலகத்தில் இருந்து முற்றாக அகற்றப்படவில்லை என்று கூறினார் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்