மரண அறிவித்தல்
தோற்றம்
26 June, 1924மறைவு
1 June, 2020அமரர் சிங்கராஜா ஆரோக்கியம் (வயது : 96)
பருத்தித்துறை
பருத்தித்துறை
பருத்தித்துறை புனித அந்தோனியார் பதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சிங்கராஜா ஆரோக்கியம் அவர்கள் 01.06.2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற அந்தோனி சிங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற அல்பிரட் ஜோசப் ( இளைப்பாறிய தபால் அதிபர் ), திரு அமிர்தநாதர் ( இளைப்பாறிய ஆசிரியர் ), திரு ஜோர்ச் அன்ரனி ( திருகோணமலை ), காலஞ்சென்ற ஜோசப் கொன்விக்டர், திரு றொபேரட் வேதநாயகம் ( சுவீடன் ), காலஞ்சென்ற
திருமதி. லியோனா யூலியற் ராணி (ஆசிரியை ), திருமதி மேரி கரோலின் (பின்லாந்து ), திரு யஸ்ரின் ரெஜினோல்ட் ( மென் பொறியியலாளர், நோர்வே ), ஆகியோரின் அன்பு தாயாரும், செல்வி மரியாம்பிள்ளை கிளாறம்மா, காலஞ்சென்ற மேரி திரேசா ( பவளம் ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற லூர்த்தம்மா, திருமதி அந்தோணியம்மா, திருமதி கொலஸ்டிக்கா புஸ்பவதி, காலஞ்சென்ற கலைச்செல்வி, திருமதி தங்கராணி (ஸ்வீடன் ), திரு பசில் ராஜ்குமார் ( இளைப்பாறிய பொறியியலாளர் ), திரு மோகனதாஸ் ( பின்லாந்து ), திருமதி மேரி ரில்வியா (நோர்வே ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி 02.06.2020 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று இறை பிரார்த்தனையின் பின்னர் பிற்பகல் 3.00 மணியளவில் கோரியடி சேமக்காலைக்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குடும்பத்தினர்