Tue. Apr 30th, 2024

துன்னாலையில் இராணுவத்திரால் வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

துன்னாலை வடக்கு 370 கிராமசேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றிற்கான வீடு அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றைய தினம் காலை 9:30 மணிக்கு  இடம் பெற்றது. குறித்த வீடு ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட திரு, திருமதி செல்வரத்தினம் ஜெயசுதா  வழங்கப்பட்டுள்ளது.
55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் குணரத்ன தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்  இதில் அடிக்கல்லினை யாழ்மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி சந்தண விஜயசுந்தர, 551 படைப்பிரிவு பரிகேடியர்  சிந்திக்க விக்கிரமசிங்க, 552 வது படை பிரிவு பிரிகேடியர்  ஜெயவீர,552 வது படை பிரிவு பிரிகேடியர்  ஜெயவீர, 553 வது படைபிரிவு ஜெயக்கொடி, யாழ்ப்பாண அரிமா கழக முன்னாலக்  ஒருங்கிணைப்பாளர் .S.S. தங்கராசா, அரிமா கழக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கமல் சில்வா, ஆகியோர் நாட்டி வைத்தனர்.
இதில் 551 படைப்பிரிவு பரிகேடியர்  சிந்திக்க விக்கிரமசிங்க, 552 வது படை பிரிவு பிரிகேடியர்  ஜெயவீர, 553 வது படைபிரிவு ஜெயக்கொடி, உட்பட்ட இராணுவ அதிகாரிகளும்,
யாழ்ப்பாண அரிமா கழக முன்னாள்  ஒருங்கிணைப்பாளர் .S.S. தங்கராசா, அரிமா கழக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கமல் சில்வா, பருத்தித்துறறை கடற்படை பொறுப்பதிகாரி,  கிராம மக்கள், கரவெட்டி பிரதேச செயலக அதிகாரிகள், மதகுரு எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதற்க்கான நிதியினை மோதர மட்டக்குளி அரிமாக் கழகம் ஊடகா வழக்கி வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்