Tue. Apr 30th, 2024

ஹாட்லிக் கல்லூரி 1988 உயர்தர பிரிவினரின் முன்மாதிரியான செயற்பாடு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 1988 உயர்தர பிரிவினரால் 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் கையளிக்கபட்டது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் பருத்தித்துறை வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் மிக அத்தியாவசிய மற்றும் நீண்டகால பயன்பாட்டு மருந்துகளின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து நோயாளர்களின் தொடர்ச்சியான மருத்துவ சேவைக்குப் பாதகம் ஏற்படாதிருப்பதற்காக பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு தொகுதி மருந்து பொருட்களினை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 1988 உயர்தர  பிரிவினர் அன்பளிப்பாக கையளித்திருந்தனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய  கேதீஸ்வரன்அவர்கள், ஹாட்லிக் கல்லூரியின் அதிபர் ரி.கலைச்செல்வன்  ஹாட்லிக் கல்லூரி 1988 உயர்தர  பிரிவின் பிரதிநிதிகள், வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்