Tue. Apr 30th, 2024

உச்சிலம்மன் ஆலயத்தில் திருட்டு முயற்சி

கரவெட்டி உச்சிலம்மன் ஆலயத்தில் மீண்டும் திருடர்கள் நுளைந்துள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி உச்சில் புவனேஸ்வரி ஆலயத்தில் நேற்று இரவு ஆலயச் சுவரினை உடைத்து திருடர்கள் ஆலயத்தினுள் சென்று திருட முற்பட்ட போதிலும் பொருட்கள் எவையும் களவாடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு ஆலயத்தின் வெளிப்புறச் சுவரை இருவர் செல்லக்கூடியதாக உடைத்து களஞ்சிய அறைக்குள் சென்றுள்ளனர். நேற்று விஐயதசமி ஆயுத பூசை ஆகையால் ஆலயத்தின் களஞ்சிய அறைக்குள் வைக்கப்பட்ட இரும்பு பெட்டகத்தில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் இருக்கலாம் என நினைத்து இருப்புப் பெட்டகத்தையும் உடைத்துள்ளனர். ஆனால் அங்கு பொருட்கள் இல்லாததை கண்ட திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சிறிது நாட்களுக்கு முன்னர் ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் கண்காணிப்பு கமராவை உடைத்ததுடன், ஆலயத்தின் பக்கமாக இருக்கும் இரும்புக் கதவையும் உடைத்தனர். ஆனால் இது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இதன் அருகில் உள்ள தேவாலயத்திலும் களவு அண்மையில் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.
அத்துடன் நெல்லியடி மகாத்மா வீதியில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசி மற்றும் பணப்பையை திருடியவரை அப்பகுதி மக்கள் பிடித்து நையப்புடைக்கப்பட்டு பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் மக்களால் நையப்புடைக்கப்பட்டதால் அவரை பொலீஸாரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது திருடன் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
வடமராட்சி நெல்லியடி பொலீஸ் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்த போதிலும் திருடர்களைப் பிடிப்பதில் பொலீஸார் அசமந்தப் போக்கை காட்டி வருவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்