Fri. May 3rd, 2024

48 நாட்டு பயணிகளுக்கான இலவச விசா வழங்கும் திட்டம் மீண்டும் ஏப்ரல் 30 வரை நீடிப்பு

குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா உட்பட 48 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளுக்கான இலவச விசா வருகை திட்டத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இலங்கை அரசாங்கம் நீடித்துள்ளது

இந்த திட்டமானது கடந்த மே மாதத்தில் இருந்து பரீட்ச்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் , ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற 258 பேரைக் கொன்ற பேரழிவுகரமான குண்டுவெடிப்பின் காரணமாக இந்த இலவச விசா வழங்குவதற்கான திட்டங்களை இலங்கை அரசாங்கம் நிறுத்தியது.

மீண்டும் ஜூலை 01 இல், இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்த்து, இந்த இலவச விசா ஆன் வருகை திட்டத்தை மீண்டும் ஆகஸ்ட் 01 முதல் 6 மாதத்திற்கு செயல்படுத்தப்பட்டது.

வழமையாக தெற்காசிய பயணிகளுக்கான அமெரிக்க டாலர் 20 விசா கட்டணமும், உலகின் பிற பகுதிகளிலிருந்து வரும்பயணிகளுக்கான 35 அமெரிக்க டாலர் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் பரீட்ச்சார்த்த முதல் 6 மாதம் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஏப்ரல் 30 ஆம்திகதி வரை இன்று அரசாங்கம் நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்