Sun. May 12th, 2024

4 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் 

நாட்டில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்தப்படவுள்ளது.
இதன்படி, குறித்த 21 மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டு, மீண்டும் நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு எதிர்வரும் 6 ஆம் திகதிவரை வரும் மூன்று நாட்களுக்கு இதேபோன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய நாளில் இரவு 8 மணிக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
இதேவேளை, 21 மாவட்டங்களில் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்க்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்